ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காஞ்சிபுரம் அருகே ரயில் பாதையில் மண்சரிவு: 4 ரயில் சேவைகள் ரத்து!

காஞ்சிபுரம் அருகே ரயில் பாதையில் மண்சரிவு: 4 ரயில் சேவைகள் ரத்து!

 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கனமழையால் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் ரயில் வழித்தடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பூசிவாக்கம் அருகே உள்ள எல்.சி.-21 பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

 

மண்சரிவு காரணமாக சென்னை மற்றும் திருமால்பூர் மார்க்கமாக இயக்கப்படும் நான்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரயில்வே நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ரயில் சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், பயணிகள் புறப்படுவதற்கு முன்பு அதிகாரப்பூர்வ ரயில்வே அறிவிப்புகளைச் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.