வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பொன்னேரியில் கனமழை: ரயில்வே பாலத்தின் கீழ் 3 அடி தேங்கிய நீர்; போக்குவரத்து பாதிப்பு!

பொன்னேரியில் கனமழை: ரயில்வே பாலத்தின் கீழ் 3 அடி தேங்கிய நீர்; போக்குவரத்து பாதிப்பு!

 

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது. இதனால் பொன்னேரி தேரடி ரயில்வே பாலத்தின் கீழ் சுமார் 3 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக பொன்னேரி – பழவேற்காடு சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

 

சாலையில் தேங்கிய மழைநீரில் சில வாகனங்கள் சிக்கிக்கொண்டதால், வாகன ஓட்டிகள் அவற்றைத் தள்ளிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ராட்சத மோட்டார்கள் மூலம் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சாலையில் போக்குவரத்து படிப்படியாகச் சீரமைக்கப்பட்டது. குறுகிய நேரத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியில் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.