ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
இந்தியா

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்! மீறினால் அபராதம்!

கர்நாடக அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்! மீறினால் அபராதம்!

 

 

கர்நாடகத்தில் அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள், பணியின்போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் சீட் பெல்ட் அணியாமல் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

ஓட்டுநர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அரசு பேருந்துகளில் உள்ள சீட் பெல்ட்டுகளைச் சீரமைத்து பயன்பாட்டுக்குத் தயாராக வைத்திருக்க போக்குவரத்துக் கழகங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பேருந்து ஓட்டுநர்கள் பாதுகாப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதுடன், விதிமீறல்களைத் தடுக்கவும் இந்த உத்தரவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.