திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

காட்பாடியில் வங்கி முன்னாள் மேலாளர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை 2 வீடுகளில் திருட முயற்சி!

காட்பாடியில் வங்கி முன்னாள் மேலாளர் வீட்டில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை 2 வீடுகளில் திருட முயற்சி!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கார்ணம்பட்டு பகுதியில் குடியிருப்பு ஒன்றில், வங்கி முன்னாள் மேலாளர் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் பெருமளவு தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

வீட்டின் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அதே குடியிருப்பு பகுதியில் அருகருகே உள்ள மற்ற 2 வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து வீடுகளை குறிவைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.