திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் புகார் வரவில்லை காவல்துறை விளக்கம்!

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் புகார் வரவில்லை காவல்துறை விளக்கம்!

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளரிடம் எந்தவொரு புகாரும் அளிக்கப்படவில்லை என காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தாக்கல் செய்த மனு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்களுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.