வீரவநல்லூரில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீரவநல்லூர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டு, கஞ்சா பதுக்கலில் ஈடுபட்டதாக சங்கர்கணேஷ் (36), மகாராஜன் (37) மற்றும் ராகுல் (25) ஆகிய 3 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சங்கர்கணேஷ் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும், அந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)