திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

மதுரையில் தொடங்கியது தனுஷின் D56 படப்பிடிப்பு அடுத்தகட்டமாக அதிரடி காட்சிகள்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் D56 படப்பிடிப்பு அடுத்தகட்டமாக அதிரடி காட்சிகள்!

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கி வரும் D56 திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது படக்குழுவினர் மதுரைக்கு சென்றுள்ளனர்.

 

மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ள இந்தப் படப்பிடிப்பில் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

இப்படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. D56 திரைப்படம் 2027ஆம் ஆண்டு கோடை விடுமுறைக் காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.