ஆக்ராவில் அரசு குடியிருப்பில் பெண் காவலர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஷாகஞ்ச் காவல் குடியிருப்பில் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி என்ற பெண் காவலர், தனது அரசு குடியிருப்பில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்த்தி, ஆக்ரா டிசிபி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதமாக விடுப்பில் இருந்த அவர், தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவர் உயிரிழந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)