ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்.. பொங்கல் முதல் தமிழக அரசின் புதிய திட்டம்! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியைத் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின்போது அறிவித்திருந்தது. இந்தத் திட்டத்திற்கு அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது திட்டம் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
**யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்பு?**
இந்தத் திட்டத்திற்காகப் பொதுமக்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே பயனாளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசின் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள், மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை பெறும் குடும்பங்கள் மற்றும் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வருமானம் கொண்ட குடும்பங்கள் உள்ளிட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
**பணம் எப்படி கிடைக்கும்?**
இலவச சிலிண்டர்களுக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான தகுதிகள் மற்றும் பயனாளிகள் தேர்வு தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு குடும்பங்களின் சமையல் எரிவாயு செலவைக் குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.




கருத்துகள் (0)