திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
அரசியல்

கொளத்தூர் இடைத்தேர்தலில் தவெக நிர்வாகிகளிடையே வேட்பாளர் போட்டி தீவிரம்!

கொளத்தூர் இடைத்தேர்தலில் தவெக நிர்வாகிகளிடையே வேட்பாளர் போட்டி தீவிரம்!

கொளத்தூர் தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட யார் வாய்ப்பு பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே அதிகரித்துள்ளது. வேட்பாளர் தேர்வுக்காக கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முன்னதாக, வி.எஸ்.பாபுவின் மகன் வி.எஸ்.பி. சதீஷ்குமாருடன் முதல்வர் விஜய் நெருக்கமாக இருப்பது போன்ற நிகழ்வுகள், கொளத்தூர் தொகுதியில் அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால் அவரே தேர்தலில் களமிறங்குவார் என கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

 

இந்நிலையில், பெரம்பூர் தொகுதியை முதல்வர் விஜய்க்காக விட்டுக்கொடுத்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவாவும் கொளத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பாளர் போட்டியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தவெக சார்பில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.