திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

மகள் குறித்து அவதூறு புகார் நடிகர் அர்ஜுன் பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் விசாரணை!

மகள் குறித்து அவதூறு புகார் நடிகர் அர்ஜுன் பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் விசாரணை!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

 

தனது மகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி, நடிகர் அர்ஜுன் கடந்த நவம்பர் 19ஆம் தேதி சென்னை காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இதையடுத்து, புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

அர்ஜுன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட பயில்வான் ரங்கநாதன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அங்கு சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, புகார் தொடர்பாக அவரது தரப்பு விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.