திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

குடும்பத்தை அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் நடிகை ராஷ்மிகா எச்சரிக்கை!

குடும்பத்தை அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் நடிகை ராஷ்மிகா எச்சரிக்கை!

கணவரும் நடிகருமான விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தொடர்ந்து, இணையத்தில் தங்களுக்கு எதிராக சிலர் தொல்லைகளை ஏற்படுத்தியதாக இருவரும் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தனது குடும்பத்தினரைப் பற்றி தவறான கருத்துகளைத் தெரிவிப்பவர்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தன்னைப் பற்றிய விமர்சனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள ராஷ்மிகா, குடும்பத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தின் மரியாதைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் யாராவது பேசினால், அதை அமைதியாக கடந்து செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், 'மைசா' திரைப்படத்தில் இடம்பெறும் போராளி கதாபாத்திரத்தைப் போல, குடும்பத்தினரை அவதூறாக பேசுபவர்களுக்கு எதிராக முழு வலிமையுடன் போராடத் தயாராக இருப்பதாகவும் ராஷ்மிகா எச்சரித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.