திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
சினிமா

‘ஜானி வாக்கர்’ பட நடிகர் ராபின் வர்கீஸ் காலமானார்!

‘ஜானி வாக்கர்’ பட நடிகர் ராபின் வர்கீஸ் காலமானார்!

மம்முட்டி நடிப்பில் வெளியான ‘ஜானி வாக்கர்’ திரைப்படத்தில் ஷெல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான மலையாள நடிகர் ராபின் வர்கீஸ் (56) காலமானார். உடல்நலப் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராபின் வர்கீஸ், கலைத்துறையில் தனது பயணத்தை ‘கொச்சின் கோரஸ்’ என்ற மிமிக்ரி குழுவின் வாயிலாகத் தொடங்கினார். மிமிக்ரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்திய அவர், பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று நடிகராக வளர்ந்தார்.

 

தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்ததுடன், குறும்படங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது மறைவுச் செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர்கள், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.