ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மனைவி மீது சந்தேகம் 18 வயது மகனை கொன்ற கணவர் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

மனைவி மீது சந்தேகம் 18 வயது மகனை கொன்ற கணவர் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பத்மநாபநகர் பகுதியில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவர் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 18 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது தாயார் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

 

சுதீப் என்பவர் தனது மனைவி சீமா மற்றும் அவரது முதல் கணவருக்கு பிறந்த 18 வயது மகன் சோஹம் ஆகியோரை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கியுள்ளார். கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு நடைபெற்ற இந்த தாக்குதலில் சோஹம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சீமா, வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தஞ்சமடைந்தார்.

 

இதற்கிடையில், சோஹமின் உடல் வீட்டில் இருந்ததை தொடர்ந்து, சுமார் 3 நாட்களுக்கு பின்னர் போலீசார் வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது குளியலறையில் சோஹமின் உடலை மீட்டதுடன், அறைக்குள் காயங்களுடன் இருந்த சீமாவையும் மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இந்த சம்பவம் தொடர்பாக சுதீப்பை போலீசார் கைது செய்து, குடும்பத்தினரை தாக்கியதற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.