மானாமதுரையில் பெண் மீது கொடூரத் தாக்குதல்… மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் முத்துலட்சுமி என்ற பெண்ணை மர்ம நபர்கள் கொடூரமாகத் தாக்கி, கழுத்தை நெரித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் அவரை வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த முத்துலட்சுமியைப் பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)