ஞாயிறு, நவம்பர் 22, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிப்பு: முதல்வர் விஜய்க்கு அமைச்சர் ராஜ்மோகன் நன்றி!

நவம்பர் 1 தமிழ்நாடு நாளாக அறிவிப்பு: முதல்வர் விஜய்க்கு அமைச்சர் ராஜ்மோகன் நன்றி!

நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை தயக்கமின்றி ஏற்று நிறைவேற்றியவர் முதல்வர் விஜய் என்று அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

இன்று (நவம்பர் 1) நடைபெற்ற தமிழ்நாடு நாள் கொண்டாட்ட விழாவில் பேசிய அவர், தனது கோரிக்கையை ஏற்று நீண்ட நாள் கனவை நனவாக்கிய முதல்வர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், இதுவரை சத்தமாகப் பேசி வந்த தன்னை சட்டமன்றத்தில் பேச வைத்த பெருமையும் முதல்வர் விஜயையே சாரும் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.