மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என அமைச்சர் பேச்சு! சர்ச்சையை ஏற்படுத்திய கருத்து!

விழுப்புரம் மாவட்டம் அயன்ரெட்டியாபட்டியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பங்கேற்றுப் பேசினார். அப்போது மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது தங்களது தோற்றத்தில் ஒழுங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முறையாக முடி திருத்தம் செய்து பள்ளிக்கு வருவது அவசியம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், சரியான முறையில் முடி வெட்டி வராத மாணவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களிடம் ஒழுக்கத்தை வலியுறுத்தும் நோக்கில் அமைச்சர் இவ்வாறு பேசியிருந்தாலும், அதற்காக மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ளத்தக்க அணுகுமுறை அல்ல என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கு அறிவுரைகளும் முறையான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டுமே தவிர, இத்தகைய கருத்துகள் மூலம் அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.




கருத்துகள் (0)