தவெகவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா; காங்கிரஸ் கட்சிக்கும் சரமாரி கேள்வி!

டெல்லியில் வாக்குத் திருட்டு புகார்களுக்கு எதிராக இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் அரசியல் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பங்கேற்காத விவகாரம் அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தவெகவின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடியுள்ளார். பாசிச சக்திகளுக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில் ராஜவிசுவாசத்துடன் அக்கட்சி நடந்து கொள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மதச்சார்பின்மைக் கொள்கையை முன்னிறுத்தும் காங்கிரஸ் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்தும் ஆ.ராசா கேள்விகளை எழுப்பியுள்ளார். மதச்சார்பின்மைக்காகப் பேசும் காங்கிரஸ் தனது சுயமரியாதையை இழந்துவிட்டதா எனக் கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய அரசியல் போக்குகளைப் பார்த்தால் மகாத்மா காந்தியும் ஜவஹர்லால் நேருவும் கவலையடையும் நிலை ஏற்பட்டிருக்கும் எனத் தனது X சமூக வலைதளப் பதிவில் கடுமையாக விமர்சித்துள்ளார்.




கருத்துகள் (0)