வெள்ளி, அக்டோபர் 16, 2026
உண்மையின் குரல்
இந்தியா

மும்பையில் 6-வது மாடியில் இருந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி: 10 வயது சிறுமியிடம் விசாரணை!

மும்பையில் 6-வது மாடியில் இருந்து விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி: 10 வயது சிறுமியிடம் விசாரணை!

 

 

மும்பை கோரேகாவ் கிழக்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒன்றரை வயது பெண் குழந்தை 6-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதே குடியிருப்பில் வசிக்கும் 10 வயது சிறுமி குழந்தையைத் தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

தொடர்ந்து, குழந்தையை 6-வது மாடியின் திறந்தவெளிப் பகுதி வழியாகத் தள்ளிவிட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமியிடமும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கான சூழல் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.