கூகுள் மேப் காட்டிய குறுகிய தெருவுக்குள் சிக்கிய கார்: பொதுமக்கள் உதவியால் மீட்கப்பட்ட 4 இளைஞர்கள்!

கேரள மாநிலம் அடூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கு காரில் வந்த நான்கு இளைஞர்கள், கூகுள் மேப் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்றபோது சிக்கலில் மாட்டிக்கொண்டனர். மேல்புறம் அருகே உள்ள செம்மங்காலி பகுதியில், இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக்கூடிய குறுகிய தெருவுக்குள் காரை இயக்கியதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறுகிய பாதையில் கார் சிக்கியதால், கதவுகளைத் திறந்து வெளியே வர முடியாமல் அவர்கள் சிரமப்பட்டதாகத் தெரிகிறது. காரிலிருந்து எழுந்த சத்தத்தைக் கேட்டுப் பொதுமக்கள் வெளியே வந்து, வாகனத்தைத் தள்ளி பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தில் காரின் இருபுறங்களும் தெருவின் சுவர்களில் உரசியதால் சேதமடைந்தன. வழிகாட்டி செயலிகளைப் பயன்படுத்தும்போது பாதையின் அகலத்தையும் சுற்றுப்புறச் சூழலையும் கவனிப்பது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.




கருத்துகள் (0)