ஞாயிறு, நவம்பர் 01, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம், அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை தினம்! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம், அரசு ஊழியர்களுக்கு மரபு ஆடை தினம்! அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கு முதலமைச்சர் விஜய் தலைவராக இருப்பார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மரபுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலை அணிந்து பணிக்கு வரும் வகையில் 'மரபு ஆடை தினம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.