செவ்வாய், நவம்பர் 03, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்! சேலத்தில் அக்.14 முதல் தொடக்கம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்! சேலத்தில் அக்.14 முதல் தொடக்கம்!

 

 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

 

இதன் ஒரு பகுதியாக, சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன. அனுபவமிக்க பயிற்றுநர்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.