பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ராணுவ ரகசியங்களை அனுப்பியதாக இளம்பெண் கைது!

பஞ்சாப் மாநிலம் பரிட்கோட்டைச் சேர்ந்த சிந்து என்ற இளம்பெண், இந்திய ராணுவ நிலைகள் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) உளவு அமைப்புக்கு அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் இரண்டு வீரர்களிடம் இருந்து இந்தியா மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் தொடர்பான முக்கியத் தகவல்களைப் பெற்று, அவற்றை அவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிந்துவைப் பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவருக்குத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் இரண்டு ராணுவ வீரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.




கருத்துகள் (0)