“தமிழ் மொழி மீதான என் அன்பு மேலும் அதிகரித்துள்ளது” – பிரதமர் மோடி!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழி மீதான தனது அன்பு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து, அங்குள்ள இடங்கள், மக்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தாங்கள் செல்லும் இடங்களில் தமிழ் மொழியின் பெருமை, தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளைப் பிற மாநில மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் மாணவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதையும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.




கருத்துகள் (0)