வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பஞ்சாபில் அதிரடி சோதனை: இஸ்ரேல் தயாரிப்பு நவீன துப்பாக்கிகள், 34 கிலோ ஹெராயின் பறிமுதல்!

பஞ்சாபில் அதிரடி சோதனை: இஸ்ரேல் தயாரிப்பு நவீன துப்பாக்கிகள், 34 கிலோ ஹெராயின் பறிமுதல்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ரவுடி கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஆயுதங்கள் மற்றும் அதிக அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

குறிப்பாக, இஸ்ரேல் நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இயந்திரத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதவிர, 5 கைத்துப்பாக்கிகள், 26 தோட்டாக்கள், வெடிமருந்துகள் மற்றும் 34 கிலோ ஹெராயின் ஆகியவையும் சோதனையில் சிக்கியுள்ளன.

 

இந்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறி மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள தொடர்புகள் மற்றும் ஆயுதங்கள், போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.