குடும்பத் தகராறில் மனைவியை கட்டிவைத்து தீ வைத்து கொலை செய்த கணவர்! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியை கணவரே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோனம் என்ற பெண்ணை அவரது கணவர் சுக்பீர் சிங் நாற்காலியில் கட்டிப்போட்டு, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சோனம் உயிரிழந்தார்.
இந்தத் தம்பதியினர் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்த நிலையில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடியதாகக் கூறப்பட்ட கணவரையும் கைது செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.




கருத்துகள் (0)