வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
இந்தியா

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு ஐபோன் 16 வழங்கிய நிறுவனம்!

தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு ஐபோன் 16 வழங்கிய நிறுவனம்!

ஊழியர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்த ஆண்டு தீபாவளிக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புதிய ஐபோன் 16 மொபைல் போன்களை தீபாவளிப் பரிசாக வழங்கி அந்நிறுவனம் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

 

ஊழியர்களுக்கு ஐபோன் வழங்கும் நிகழ்வு தொடர்பான வீடியோவை நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "எங்கள் நிறுவனத்தில் போட்டியாளர்கள் இல்லை" என்று குறிப்பிட்டதுடன், மற்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டு என்ன தீபாவளிப் பரிசு கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இத்தகைய பரிசுகளை வழங்கிய நிறுவனத்தின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.