வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
இந்தியா

பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் 'நயீ சேத்னா' பிரச்சாரத்தின் 5-வது பதிப்பு தொடக்கம்!

பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் 'நயீ சேத்னா' பிரச்சாரத்தின் 5-வது பதிப்பு தொடக்கம்!

ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் பெண்களின் உரிமைகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் 'நயீ சேத்னா – பஹல் பத்லாவ் கி' (Nayi Chetna – Pahal Badlaav Ki) பிரச்சாரத்தின் 5-வது பதிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்த முன்னெடுப்பு, 2022ஆம் ஆண்டு தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

கிராமப்புறங்களில் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு, குடும்பம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு சமமான உரிமையும் வாய்ப்பும் கிடைப்பதை உறுதி செய்வதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும். பெண்கள் பொருளாதார நடவடிக்கைகளில் அதிக அளவில் பங்கேற்பதுடன், வருமானம் ஈட்டுவதிலும், குடும்ப சொத்துக்கள் மீதான உரிமை மற்றும் கட்டுப்பாட்டைப் பெறுவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

 

மேலும், பெண்கள் பாதுகாப்பாக வெளியே சென்று தங்களது தேவைகளுக்கான பயணங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்குவது, அவர்களின் நடமாட்டத்திற்கான தடைகளை குறைப்பது போன்ற அம்சங்களும் இந்த முயற்சியில் இடம்பெறுகின்றன. குடும்பத்தில் பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஊதியமில்லாத வீட்டு வேலைகள் மற்றும் குழந்தைகள், முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பணிகளை மற்ற குடும்ப உறுப்பினர்களும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்தப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

 

பெண்களின் பொருளாதார பங்களிப்பு, சொத்துரிமை, பாதுகாப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகளை சமமாக பகிர்ந்துகொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதே 'நயீ சேத்னா' பிரச்சாரத்தின் அடிப்படை இலக்காக உள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.