பெங்களூருவில் உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டபோது திடீர் மாரடைப்பு – 42 வயது ஊழியர் பரிதாப உயிரிழப்பு!

பெங்களூரு கோட்டிகரே பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 42 வயது ஊழியர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குரு கிரீன்ஸ் குடும்ப உணவகத்தில் பணியாற்றி வந்த சந்துரு, அக்டோபர் 30ஆம் தேதி வழக்கம்போல் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில நொடிகளிலேயே இருக்கையில் அமர்ந்திருந்த அவர் மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் உடனடியாக அவருக்கு சிபிஆர் முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவருக்கு நினைவு திரும்பாததால், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர்.
ஆனால் சந்துருவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். உணவகத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவம் ஹுலிமாவு காவல் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 42 வயதிலேயே உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் திடீரென உயிரிழந்தது அவரது சக ஊழியர்கள், உறவினர்கள் மற்றும் அறிந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
In a tragic incident, a 42-year-old man died after suffering a suspected heart attack while having his meal at a family restaurant in Gottigere, Bengaluru. The incident, which was captured on the restaurant's CCTV camera, occurred on October 30 at around 11:40 am. The deceased has been identified as Chandru, a native of Channarayapatna, who had been working as a bar cashier at Guru Greens Family Restaurant in Gottigere for several years. According to reports, Chandru was seated at a table and having his meal when he suddenly complained of severe chest pain. Within moments, he reportedly collapsed face-down onto the table after suffering a suspected heart attack. Restaurant employees who witnessed the incident immediately rushed to his assistance. The restaurant staff immediately attempted to revive Chandru by performing cardiopulmonary resuscitation (CPR). However, he reportedly failed to regain consciousness. He was subsequently rushed to a nearby private hospital for emergency medical treatment. Despite the efforts of doctors, Chandru could not be saved. The entire incident, including Chandru suddenly collapsing while eating and the restaurant staff rushing to help him, was captured on the establishment's CCTV camera. The footage has reportedly brought attention to the sudden and tragic incident, leaving his colleagues and acquaintances in shock. The incident took place at Guru Greens Family Restaurant in Gottigere, which falls under the jurisdiction of Hulimavu Police Station. Police have registered a case in connection with the incident and are looking into the circumstances surrounding Chandru's death.
— Hate Detector 🔍 (@HateDetectors) October 31, 2026




கருத்துகள் (0)