இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தலைமைத் தளபதியாக மெஹ்தாப் சிங் தேஸ்வால் நியமனம்!

இந்திய விமானப்படையின் கிழக்கு பிராந்திய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் 2026 நவம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 1989-ம் ஆண்டு போர் விமானி பிரிவில் தனது பணியைத் தொடங்கிய இவர், பல்வேறு வகையான போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இதுவரை 3,200 மணி நேரத்திற்கும் மேலாக விமானங்களை இயக்கியுள்ளார்.
தாக்குதல் மற்றும் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்புத் திறன் பெற்றுள்ள இவர், தனது சிறப்பான சேவைக்காக அதி விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.




கருத்துகள் (0)