சனி, அக்டோபர் 17, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ராஜஸ்தானில் கோர விபத்து: 15 அடி உயரத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்த மினி பஸ்; 8 பேர் பலி!

ராஜஸ்தானில் கோர விபத்து: 15 அடி உயரத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்த மினி பஸ்; 8 பேர் பலி!

 

 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி–மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் இன்று (அக். 17) காலை சுமார் 6 மணியளவில் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 15 அடி உயரத்திலிருந்து கால்வாயில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 

கால்வாயில் தண்ணீரும் சேறும் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிரேன் உள்ளிட்ட உபகரணங்களின் உதவியுடன் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.