நுரையீரல் தொற்று: 98 வயதான அத்வானி டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானி (98), நுரையீரல் தொற்று காரணமாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு நுரையீரல் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதுடன், உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
மருத்துவப் பரிசோதனைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வயது முதிர்ந்த நிலையில் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதால், அவரது உடல்நிலை குறித்த அடுத்தகட்ட மருத்துவத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.




கருத்துகள் (0)