ரயில்வேயில் 1,688 காலிப்பணியிடங்கள்! 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலை தேடும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,688 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; வயது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பணிகளுக்கு மாதம் ரூ.21,700 அடிப்படை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய கட்டங்களின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2026 என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முன்பு வயது வரம்பு, தகுதிகள், பணியிட விவரங்கள் மற்றும் தேர்வு நடைமுறை உள்ளிட்ட முழு தகவல்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_07_2026_NTPC_UG.pdf]




கருத்துகள் (0)