ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது யார்? அமைச்சர் ராஜ்மோகனுக்கு CPM மாநிலச் செயலாளர் கேள்வி!

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெறுவதற்காக தன்னிடம் ரூ.5 கோடி லஞ்சம் வழங்க ஒருவர் முன்வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக CPM மாநிலச் செயலாளர் சண்முகம் விளக்கம் கேட்டுள்ளார்.
அமைச்சரிடம் லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் யார் என்பதைப் பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்றும், அத்தகைய செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர் மீது இதுவரை ஏன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் அமைச்சர் விளக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் தனது X சமூக வலைதளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஊழல் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வெறும் பேச்சாக இல்லாமல், அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருப்பதாகவும் சண்முகம் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)