SIR முறையால் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, சென்னையில் இன்று (அக். 15) நடைபெற்ற இந்தியா கூட்டணியின் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் எனக் கருதி, அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை வேறு தொகுதியில் போட்டியிடுமாறு தான் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். மேலும், கொளத்தூர் தொகுதியில் SIR நடைமுறையின் மூலமாகவே ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டதாகவும் திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.




கருத்துகள் (0)