செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ராஜேந்திர அர்லேக்கர் நியமனம்! குடியரசுத் தலைவர் உத்தரவு!

 

 

தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர், தற்போது தமிழகத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், கேரள ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நியமனங்கள் மூலம் பல்வேறு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.