தருமபுரியில் குப்பைக் குழியில் புதைக்கப்பட்ட மர்ம உடல்! போலீசார் தீவிர விசாரணை!

தருமபுரி மாவட்டம் கடத்தூர், ரங்கசாமி செட்டியார் தெருவில் உள்ள குப்பைக் குழியில் மர்ம உடல் புதைக்கப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, கடத்தூர் காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டனர். அந்த உடல் ஆணுடையதா அல்லது பெண்ணுடையதா என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை. உடலை அங்கு கொண்டு வந்து புதைத்தது யார், உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)