செவ்வாய், அக்டோபர் 13, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

குழந்தைகளைக் கம்பால் தாக்கி, சிகரெட்டால் சூடு வைத்துக் கொடுமை! தாய் உட்பட இருவர் கைது!

குழந்தைகளைக் கம்பால் தாக்கி, சிகரெட்டால் சூடு வைத்துக் கொடுமை! தாய் உட்பட இருவர் கைது!

 

 

கன்னியாகுமரி மாவட்டம் பறக்கை அருகே, திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கூறி, தனது குழந்தைகளைத் தாய் சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் சுகன்யா, தனது கள்ளக்காதலன் ரஞ்சித்குமாருடன் சேர்ந்து குழந்தைகளைக் கம்பால் தாக்கியதுடன், சிகரெட்டால் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மாமன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், குழந்தைகள் மீதான துன்புறுத்தல் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய தாயே இத்தகைய கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.