திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு!

டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு அனுமதி மறுப்பு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பார்களை நடத்துவதற்கான புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் பார்கள் அமைக்க அனுமதி கிடையாது. அதேபோல், ஹோட்டல் வளாகங்களிலும் பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், 21 வயதுக்குட்பட்டவர்களை பார்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பார் அமைப்பதற்கான இடத்துக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநரின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியார் ஒப்பந்தப்புள்ளி நடைமுறை மூலம் பார்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.