திங்கள், நவம்பர் 02, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் திறப்பு.. முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

புதுக்கோட்டையில் ரூ.23.25 கோடியில் புதிய நவீன பேருந்து நிலையம் திறப்பு.. முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி சாலையில் ரூ.23.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நவீன பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று (நவம்பர் 2) திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். கடந்த 2024-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்தத் திறப்பு விழா நடைபெற்றது.

 

திறப்பு விழாவைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளை முதலமைச்சர் விஜய் நேரில் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.