ஞாயிறு, அக்டோபர் 18, 2026
உண்மையின் குரல்
அரசியல்

திருச்சி அல்லது நெல்லையில் தவெகவின் 3-வது மாநில மாநாடு? அடுத்த ஆண்டு நடத்தத் திட்டம்!

திருச்சி அல்லது நெல்லையில் தவெகவின் 3-வது மாநில மாநாடு? அடுத்த ஆண்டு நடத்தத் திட்டம்!

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது மாநில மாநாட்டைத் திருச்சி அல்லது திருநெல்வேலியில் நடத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் ஆண்டு விழா, தேர்தல் வெற்றி மற்றும் தலைவர் விஜய்யின் பிறந்தநாள் ஆகியவற்றை இணைத்து, முப்பெரும் விழாவாக இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாநாடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையே, மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகளிலும் தவெக மாவட்டச் செயலாளர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. இருப்பினும், மூன்றாவது மாநில மாநாடு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இறுதி முடிவாகக் கருத முடியாது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.