தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலில் குரல் கொடுத்தது திமுகதான் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் எழுப்பிய கட்சி திமுகதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், இதுதொடர்பாக திமுக ஆரம்பத்திலிருந்தே தனது எதிர்ப்பையும் கவலையையும் வெளிப்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கீட்டின் அடிப்படையில் தற்போது நிலவும் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரத்தில் திமுக முன்வைக்கும் இரண்டு முக்கிய கோரிக்கைகளிலும் உறுதியாக இருப்பதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்கப்படாது என்றும் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் (0)