வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
அரசியல்

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது பெண் அதிகாரி அளித்த புகார் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த மனு இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறையில் திறமையான புதிய அதிகாரிகள் பலர் இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். மாநில காவல்துறையினரால் இந்த வழக்கை முறையாக விசாரிக்க முடியும் என்ற கருத்தையும் நீதிமன்றம் வெளிப்படுத்தியது.

 

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் உடன்பாடு இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், அருள் விக்னேஷ் மீதான பெண் அதிகாரியின் புகார் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.