வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்ற கோரிக்கை!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தீபம் ஏற்ற கோரிக்கை!

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

கார்த்திகை தீபத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர் தரப்பு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள அதே தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. தீபத் திருவிழா நாட்கள் தொடர்ந்து நடைபெறுவதால், தீபம் ஏற்றுவதற்கான உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வேண்டும் என கோரப்பட்டது.

 

மேலும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை அமல்படுத்தாததற்கு அரசியல் காரணங்களே பின்னணியில் இருப்பதாகவும் மனுதாரர் தரப்பு குற்றம்சாட்டியது. நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாத விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.