வெள்ளி, நவம்பர் 27, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

கோவை 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கடந்த மே 21ஆம் தேதி 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது. சிறுமி காணாமல் போனதைத் தொடர்ந்து தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில், மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டது.

 

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் மோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கி கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

 

வழக்கு விசாரணையின்போது 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 221 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் அனைத்து விசாரணை நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன.

 

இதனைத் தொடர்ந்து, இன்று நவம்பர் 27ஆம் தேதி கோவை போக்சோ நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.