திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

உள்ளாட்சி ஊழியர்களுக்கு இனி ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்!

உள்ளாட்சி ஊழியர்களுக்கு இனி ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல்!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பணியிட மாற்ற நடைமுறையில் புதிய விதிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஊழியர்களுக்கான இடமாற்றங்கள் ஆன்லைன் கலந்தாய்வு வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

இதன்படி, தகுதியான காலிப்பணியிடங்கள் மற்றும் ஊழியர்களின் பணிமூப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் இடமாற்ற கலந்தாய்வு நடத்தப்படும். இந்த நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இடமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன், அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.