திங்கள், நவம்பர் 23, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகர் கடத்தல்.. காரைக்குடி சாலையில் இறக்கிவிட்டு தப்பிய கும்பல்!

கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகர் கடத்தல்.. காரைக்குடி சாலையில் இறக்கிவிட்டு தப்பிய கும்பல்!

கிரிக்கெட் சூதாட்ட இடைத்தரகராக செயல்பட்டு வந்த அங்கப்பராஜ் என்பவரை மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 21ஆம் தேதி நள்ளிரவில் அவரை காரில் அழைத்துச் சென்ற கும்பல், பின்னர் காரைக்குடி பகுதியில் உள்ள சாலையில் இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கப்பராஜை மீட்டு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடத்தப்பட்டபோது தனது கண்கள் கட்டப்பட்டு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், தன்னை கடத்திச் சென்றவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும், பணம் கேட்டு மிரட்டவும் இல்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.