வியாழன், நவம்பர் 05, 2026
உண்மையின் குரல்
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 1,600 கிலோ கலப்பட கோவா பறிமுதல்!

உத்தரப் பிரதேசத்தில் 1,600 கிலோ கலப்பட கோவா பறிமுதல்!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவுப் பொருட்களில் கலப்படம் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

இதன் ஒரு பகுதியாக, லால்பூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கோவா தயாரிக்கும் தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 1,600 கிலோ கலப்பட கோவா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3.20 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட கலப்பட கோவா முழுவதையும் அதிகாரிகள் அழித்தனர். மேலும், அதன் தரம் மற்றும் கலப்படத் தன்மையை உறுதி செய்வதற்காக நான்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.