உத்தரப் பிரதேசத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 17 வயது சிறுவன் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மனியர் பகுதியில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதைத் தனது செல்போனில் பதிவு செய்து மிரட்டியதாக 17 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமிக்கு அறிமுகமான அந்தச் சிறுவன், அவரைத் தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தைத் தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




கருத்துகள் (0)