வங்கக்கடலில் உருவாகும் ‘முரசு’ புயல்; தமிழகத்துக்கும் கனமழை எச்சரிக்கை!

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவம்பர் 1) புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட உள்ளது.
தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நவம்பர் 3ஆம் தேதி ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கருத்துகள் (0)